தமிழகம்

1.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

2.தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.


இந்தியா

1.மத்திய அரசின் நிதி சேவை துறையின் இணைச் செயலராக  பூஷண் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

2.தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, முகநூல் பக்கங்களில் இடம்பெற்றுள்ள தேர்தல் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று முகநூல் நிறுவனத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.


வர்த்தகம்

1. எஸ்.பி.ஐ  நிர்­வாக இயக்­கு­னர் பத­வி­யில் இருந்து பி.ஸ்ரீராம் ராஜி­னாமா செய்­துள்­ளார்.

2.தமி­ழ­கத்­தில் தொழில் துவங்க, 20க்கும் மேற்­பட்ட பெரு நிறு­வ­னங்­கள், ஒற்றை சாளர முறை­யில் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்­துள்­ளன.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரடியாக கலந்துரையாடும் உச்சி மாநாடு 2018, ஜூலை 16ம் தேதி பின்லாந்தில் நடைபெறும் என வெள்ளை மாளிகை  அறிவித்தது.


விளையாட்டு

1. உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு பிரேசில் அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் செர்பியாவை 2–0 என வீழ்த்தியது.போலந்துக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் தோற்றபோதும், ஜப்பான் அணி ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு முன்னேறியது.

2.சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.


ன்றைய தினம்

  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)

–தென்னகம்.காம் செய்தி குழு