தமிழகம்

1.பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்ற நிலையில், 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.மேலும் 82 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் 13 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன.

2.புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருதுக்கு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

3.திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பொன்னிமலை சித்தன் மலைப் பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னம் கண்டறியப்பட்டுள்ளது.பெரிய அளவிலான 3 பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துள்ளது போல இது அமைந்துள்ளது. இறந்தவர்கள் நினைவாக, புதைத்த இடத்திலோ அல்லது வேறு பகுதியிலோ இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதே போன்ற வடிவமைப்பு கொண்ட கல் திட்டைகள் ஆஸ்திரேலியாவில் ஊரூ என்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இப் பழங்குடிகளின் நிறம், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்கள் தமிழர்களை போன்றே உள்ளது. தமிழர்கள் பயன்படுத்திய வளரி என்ற ஆயுதமும், அவர்கள் பயன்படுத்தும் பூமராங் என்ற ஆயுதமும் ஒரே வடிவமைப்பை கொண்டது. இவர்கள் நெற்றியில் இடும் குறியீடு பழனியை அடுத்த ரவிமங்கலத்தில் கிடைத்த பண்டைய கால முதுமக்கள் தாழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.

ஆகவே, இங்கு வசிக்கும் பழங்குடிகள் தமிழர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அண்மையில், அப் பழங்குடியினரிடமும், தமிழகத்தின் கடலோரப் பகுதி தமிழர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட எம்130 வகையிலான மரபணு பரிசோதனையில் இருவருக்குமிடையே ரத்த மாதிரிகள் ஒன்றாக இருப்பதை ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.


இந்தியா

1.கர்நாடகத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்  உத்தரவிட்டுள்ளார். ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா பொறுப்பேற்க இருக்கிறார்.

2.எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) புதிய தலைமை இயக்குநராக, “ரா’ உளவு அமைப்பின் சிறப்பு செயலராக உள்ள வி.கே.ஜோஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

3.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி(77), ஹைதராபாதில் காலமானார்.


வர்த்தகம்

1.அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.


உலகம்

1.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலாவதாக பெனின் நாட்டுக்கு வந்தார். இதன் மூலம் பெனினுக்கு வரும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

2.தலிபான் பயங்கரவாதிகளுடன் முதல் முறையாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஆப்கன் அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.இந்தோனேஷிய அதிபர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் மேரி கோம், சிம்ரஞ்சித், பிரஹலாதா ஆகியோர் தங்கம் வென்றனர்.உலகக் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகும் வகையில் லாபுவன் பஜோ நகரில் அதிபர் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

2.தேசிய மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் பக்தி குல்கர்னி.காரைக்குடியில் 46-ஆவது மகளிர் தேசிய செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி, ஆந்திரத்தைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் பிரதியுஷா போத்தாவும் மோதினர். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.


ன்றைய தினம்

  • சர்வதேச புலிகள் தினம்
  • தாய்லாந்து, தாய்மொழி தினம்
  • ருமேனியா தேசிய கீத தினம்
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)
  • பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1957)

– தென்னகம்.காம் செய்தி குழு