தமிழகம்

1.தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலம் குன்றியுள்ள நிலையில், அவருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் உதவ தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2.தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், அவற்றை மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை என சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
3.மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளோருக்கு உணவூட்டு மானியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள், அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ளோருக்கு உணவினை வழங்க நாளொன்றுக்கு ரூ.15 வீதம் உணவூட்டு மானியமாக ரூ.650 என்ற அளவில் உயர்த்தப்பட்டது.


இந்தியா

1.பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுமார் 1,000 ராக்கெட்டுகள், கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2.தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் மரபை தடை செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் முன்வைத்த பரிந்துரையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் நிராகரித்துள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.77 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.440 கோடி) அதிகரித்து 40,514 கோடி டாலராக (ரூ.26.33 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
2.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி முதல் காலாண்டில் ரூ.1,975.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
3.பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 11.87 சதவீதம் அதிகரித்துள்ளது.
4.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ. 9,459 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.8,021 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகம். வருவாய் 56.5 சதவீதம் அதிகரித்து ரூ. 1,14,699 கோடியானது.


உலகம்

1.இந்தியா- நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு, நேபாளத் தலைநகர் காத்மாண்டில், வரும் ஜூலை 31-ஆம் தேதி தொடங்குகிறது.


ன்றைய தினம்

1.இன்று சர்வதேச புலிகள் தினம்(International Tiger’s Day).
உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலி மட்டுமே. புலியின் எண்ணிக்கை உலகளவில் வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. புலிகள் பாதுகாப்பு மாநாடு ஜெயின்ட், பீட்டர்ஸ்பர்க் நகரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச புலிகள் தினத்தை அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு