Current Affairs – 29 January 2019
தமிழகம்
1.தொழில் முதலீட்டில் தமிழகம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
2.2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழி பெயர்ப்பு விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது.ஜி.ஆர். இந்துகோபனின் “மணியன் பிள்ளையுட ஆத்ம கதா’ எனும் மலையாள சுயசரிதையை “திருடன் மணியன்பிள்ளை’ எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்த குளச்சல் மு.யூசுஃப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா
1.ராஜஸ்தான் மாநிலம், ராம்நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் 78. 9 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
வர்த்தகம்
1.2017-18 நிதியாண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரித்து, ரூ.28.25 லட்சம் கோடியாக உள்ளது. ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரே நாளில் 59 ஆயிரத்து 839 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகமுள்ள விமான நிலையங்களின் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
விளையாட்டு
1.சர்வதேச மகளிர் ஹாக்கி போட்டியில், இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய 2-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
2.சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையருக்கான பிரிவில், ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3 இடங்கள் சறுக்கி 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
இன்றைய தினம்
- கிப்ரல்டார் அரசியலமைப்பு தினம்
- அமெரிக்க மத்திய உளவுத்துறை நிறுவனம்(சி.ஐ.ஜி.,) அமைக்கப்பட்டது(1946)
- ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது(1595)
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி இறந்த தினம்(1998)
– தென்னகம்.காம் செய்தி குழு