இந்தியா

1.இந்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக விஜய் கோகலே இன்று பதவியேற்றார்.
2.உடம்பில் டாட்டூ இருந்தால் விமானப்படை வேலையில் சேரமுடியாது என்பதை டெல்லி ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
3.ஆக்ஸ்போர்டு அகராதியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த இந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
4.குறைந்த செலவில் வாழத்தகுந்த நாடுகள் குறித்து கோபேங்கிங்ரேட்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனத்தின் சார்பில் 122 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தப்பட்டியலில் ஆப்ரிக்க நாடான தென்னாப்ரிக்கா முதல் இடம் பிடித்தது.இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 14-வது இடத்திலும், நேபாளம் 28-வது இடத்திலும், வங்காளதேசம் 40-வது இடத்திலும் உள்ளன. இந்த கணக்கெடுப்ப்பில் மிக விலை உயர்ந்த நாடாக பெர்முடா உள்ளது. அதைத்தொடர்ந்து பஹாமாஸ் (111), ஹாங்காங் (110), சுவிட்சர்லாந்து (109), கானா (108) ஆகிய நாடுகள் உள்ளன.


இன்றைய தினம்

1.1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு