தமிழகம்

1.லோகாயுக்த் அமைப்புக்குத் தலைவர், உறுப்பினர்களைக் கண்டறிந்து அவர்களது பெயர்களை அரசுக்குப் பரிந்துரை செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.பாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2.தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளராக கே.பணீரந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள நிலையில், முழு கூடுதல் பொறுப்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.மத்திய ஹோமியோபதி கவுன்சிலை (சி.சி.ஹெச்.) கலைத்து விட்டு அதற்கு மாற்றாக, தேசிய ஹோமியோபதி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2.கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.9 லட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் காணாமல் போனதாக மத்திய அரசு தெரிவித்தது.

3.டிடிஹெச், கேபிள் ஆகியவற்றில் விருப்பமான சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்துகொள்ள ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்தது.

4.அஞ்சலக பட்டுவாடா வங்கிகள் (பேமண்ட் பேங்க்) மூலம் இதுவரை சுமார் 19 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5.ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவகத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளையை அரசியல் சாராத அமைப்பாக உருவாக்கும் முயற்சியாக, அதன் நிரந்தர உறுப்பினர் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் தலைவரை நீக்க வகைசெய்யும் மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

6.ஜம்மு காஷ்மீரில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.


வர்த்தகம்

1.புது தில்லியில் நடைபெற்ற ஸ்காட்ச் குழுமத்தின் 55ஆவது பொருளாதார மாநாட்டில் 2018ஆம் ஆண்டுக்கான தங்கப் பதக்க விருது ரெப்கோ மைக்ரோ பைனான்ஸுக்கு வழங்கப்பட்டது.

2.நுகர்­வோ­ருக்கு தர­மான, பாது­காப்­பான உணவு வகை­கள் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், வலை­தள உணவு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய விதி­மு­றை­களை, மத்­திய உணவு பாது­காப்பு மற்­றும் தர கட்­டுப்­பாட்டு ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது.

3.நடப்பு நிதி­யாண்­டில், மத்­திய நிறு­வன பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் பதிவு பட்­டி­ய­லில் இருந்து, ஒரு லட்­சத்­திற்­கும்
அதி­க­மான போலி நிறு­வ­னங்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன.

4.இந்­தாண்டு இந்­திய பங்­குச் சந்­தை­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 38 ஆயி­ரத்து, 850 கோடி ரூபாய்
திரட்­டி­யுள்­ளன. இதன் மூலம், அதிக தொகை திரட்டி சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களில் அமெ­ரிக்­கா­விற்கு அடுத்த இடத்தை, இந்­தியா பிடித்­துள்­ளது.


உலகம்

1.இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் லோதே ஷேரிங், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, பூடானுக்கு இந்தியா சார்பில் ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

2.வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிப் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹீனா சித்து, 587 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இவர், 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ தகுதிச்சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற கிரீஸ் வீராங்கனை அனா கோராகாகியின் (587 புள்ளி) உலக சாதனையை சமன் செய்தார்.


ன்றைய தினம்

  • தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்(1891)
  • உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது(1993)
  • மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1911)
  • ஐரிய சுதந்திர நாடு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது(1937)

– தென்னகம்.காம் செய்தி குழு