தமிழகம்

1.தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்தி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2.தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளன. 1-ஆம் தேதிக்குப் பிறகும் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தினால் அவற்றைப் பறிமுதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கவும் சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது.

3.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) 42-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.4-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.


இந்தியா

1.பஞ்சாப் மாநிலத்தில் 13,276 கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.30) வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


வர்த்தகம்

1.கடந்த நிதியாண்டில் ஏடிஎம்.களின் எண்ணிக்கை 10,000 குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.இந்தியாவில் தங்க ஆபரணங்களுக்கான தேவை 6-7 சதவீதம் வரை அதிகரிக்கும் என இக்ரா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16 கோடி டாலர் (ரூ.1,170 கோடி) அதிகரித்துள்ளது.

4.வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ.10.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகம்

1.எமன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் ஸ்வீடனில் இந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முக்கியத்துவம் வாய்ந்த ஹுதைதா துறைமுகத்திலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் தொடங்கினர்.

2.வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைத் தகர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியாமல் போனது.செர்பியாவில் நடைபெற்ற செஸ் போட்டியொன்றை வென்ற 12 வயது சென்னை வீரர் குகேஷ், கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்குரிய 2-வது தகுதியை அடைந்தார்.  இந்தமுறை தோல்வியடைந்தாலும் விரைவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை குகேஷ் அடையவுள்ளார்.


ன்றைய தினம்

  • தமிழக ஆன்மிகவாதி ரமண மகரிஷி பிறந்த தினம்(1879)
  • சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)
  • உலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)
  • சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)

– தென்னகம்.காம் செய்தி குழு