இந்தியா

1.ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
2.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த உருது கதாசிரியர் முகமது பைக் எக்சாசுக்கு சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘துக்மா’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய சிறுகதைக்காக இந்த விருது அளிக்கப்படவுள்ளது.
3.சமூக வலைத்தளமான டுவிட்டரில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறி இந்த ஆண்டில் நமது நாட்டில் முதல் இடத்தை பிடித்த ‘ஹேஷ்டாக்’ எவை என்று தெரியுமா? ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி முதலிடம் பிடித்துள்ளது.
4.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன சூப்பர் சோனிக் வான்வழி தாக்குதல் தடுப்பு ஏவுகணை நேற்று ஒடிசாவில் உள்ள பலசோர் கடல் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
5.மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கில் நீக்குவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இருப்பினும், வனப்பகுதி நிலங்களில் மூங்கிலானது மரமாகவே கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேவின் துணைஅதிபராக முன்னாள் ராணுவ ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா நேற்று பதவியேற்றார்.முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவா, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.1851 – அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு