தமிழகம்

1.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர்களே மேற்கொள்ளும் புதிய திட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

2.அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 1,200 சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு கள ஆய்வின்றி இணையதளம் வாயிலாக கட்டட மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகைசெய்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

2.வரும் 2021-22-ஆம் ஆண்டுக்குள் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3.பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவராக மாயாவதி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

4.அடுத்த 9 நாள்களில் நிலவின் பரப்பில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்க உள்ள நிலையில், நிலவுப் பகுதியில் அதன் நீள்வட்டப் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.


வர்த்தகம்

1.ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் – 9’ உள்ளது. இதை, அனைத்து வணிகர்களும் தாக்கல் செய்வது அவசியம். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், வரும், 31ல் முடிவதாக இருந்தது.தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2.பிரிட்டன் நாடாளுமன்றத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வரை முடக்க அந்த நாட்டு அரசி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

3.சீனாவுக்கு அதிகாரப்பூர்வ தலைமைப் பாதிரியாரை கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாடிகன் முதல் முறையாக நியமித்துள்ளது.


விளையாட்டு

1.ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச ஜூனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் 17 வயது இளம் வீராங்கனை கோமாலிகா பாரி.


ன்றைய தினம்

  • இந்திய தேசிய விளையாட்டு தினம்
  • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)
  • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
  • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)

– தென்னகம்.காம் செய்தி குழு