Current Affairs – 29 August 2018
தமிழகம்
1.தபால்துறை சார்பில், நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்கும் திட்டம் (பேமென்ட்ஸ் வங்கி) வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
முதல்கட்டமாக தமிழகத்தில் 37 கிளைகள் உள்பட நாடு முழுவதும் 648 கிளைகளில் இந்த வங்கிச் சேவை அளிக்கப்படவுள்ளது.
2.தடை தாண்டும் ஓட்டப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
3.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தியா
1.ககன்யான்’ திட்டத்தின் கீழ், வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
2.அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) 40 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படாதது குறித்து மறு ஆய்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகம்
1.மத்திய அரசு, முதன் முறையாக, ‘பாரத்மாலா கடன் பத்திரங்கள்’ வெளியிட்டு, 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
2.நடப்பு 2018-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 5.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
3.ஐடிபிஐ வங்கியின் 14.9 சதவீத பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்க உள்ளது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
4.கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2017-18 பயிர் பருவத்தில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 28.48 கோடி டன்னை எட்டும் என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம்
1.ஐ.நா. சபையின் உதவி பொதுச் செயலாளராகவும், நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
2.தெற்கு சூடான் நாட்டில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த மலாக்கல் விமான நிலையத்தின் ஓடுதளத்தையும், அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திய இந்திய அமைதிப்படையினருக்கு தெற்கு சூடான் பாராட்டு தெரிவித்துள்ளது.
3.வியத்நாமில், அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான பாம் பின் மின் தலைமையில் நடைபெறும் 16-ஆவது கூட்டு மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கலந்துகொண்டார். அப்போது, அந்நாட்டுப் பிரதமர் நயூன் ஸான் யூக்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.
விளையாட்டு
1.ஆசியப் போட்டி தடகளம் 800 மீ ஓட்டத்தில் இந்தியாவின் மஞ்சித்சிங் தங்கம், ஜின்சன் ஜான்சன் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.
பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
வில்வித்தை மகளிர், ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி வெள்ளி வென்றது.
தென்கொரியாவுக்கு எதிராக நடைபெற்ற டேபிள்டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
2.உலக யூத் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அங்கித், பவேஷ், நேஹா, சாக்ஷிஆகியோர் வெண்கலம் வென்றனர்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக யூத் குத்துச்சண்டை போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்றைய தினம்
- இந்திய தேசிய விளையாட்டு தினம்
- செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)
- பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
- மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
- தென்னகம்.காம் செய்தி குழு