Current Affairs – 29 April 2019
தமிழகம்
1. அடுத்த 3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், 2021-ஆண்டுக்குள் 1,000 புதிய ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 300 விரைவு ரயில்கள் இயக்கவும், அந்த்யோதயா, ஹம்சபர், இரட்டை அடுக்கு குளிர்சாதன ரயில் (டபுள்டெக்கர்) வகைகளில் சிறப்பு வகை ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா
1.17-வது மக்களவைக்கான நான்காவது கட்டமாக 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
2.மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 20 லட்சம் மாநில போலீஸார், 2.7 லட்சம் துணை ராணுவ படையினர் என மொத்தம் 22.7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம்
1.பாகிஸ்தானின் கர்தார்பூர் குருத்வாரா அருகே 500 ஆண்டுகள் பழைமையான கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2.ஸ்பெயின் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விளையாட்டு
1.உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்று வந்த இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி பதக்கம் என 4 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது.
சீனா தலா 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தையும், ரஷ்யா 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பெற்றன.
இன்றைய தினம்
- சர்வதேச நடன தினம்
- ஜப்பான் தேசிய தினம்
- புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
- இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)
– தென்னகம்.காம் செய்தி குழு