தமிழகம்

1.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, மெரீனாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளித்து தனிநீதிபதி சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர் விமானம் மூலம், வான்வழியாக வெகு தொலைவில் (பிவிஆர்) உள்ள எதிரியின் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

2.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


உலகம்

1.தேனீக்களைக் கொல்லும் அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை வயலில் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.


விளையாட்டு

1.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய் ராய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2.சீனாவின் ஹூஹான் நகரில் நடைபெறும் ஆசிய பாட்மிண்டன் கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், பிரணாய் ஆகியோர் தோல்வியடைந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.


ன்றைய தினம்

1. ஜப்பான் – தேசிய நாள்

2.அனைத்துலக நடன நாள்

3.பாரதிதாசன் பிறந்தநாள்

 

–தென்னகம்.காம் செய்தி குழு