தமிழகம்

1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய 2 பிரிவு பணியிடங்களுக்கும் இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை  தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

2.இடைத் தேர்தல் நடைபெறவுள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3.குந்தாரப்பள்ளி அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய குத்துக்கல்லை வரலாற்று ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர்.குத்துக்கல் என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால மக்கள், இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச் சின்னங்களில் ஒன்று.

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், மாவட்ட அரசு அருங்காட்சியகம் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வரலாறுகளைக் கண்டறிந்து, அவற்றைப் பதிவு செய்து வருகின்றனர்.


இந்தியா

1.உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதி என 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், உத்தரப் பிரதேசம், திரிபுராவில் ஆளும் பாஜக வெற்றி பெற்றது. கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியும், சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரசும் வெற்றி பெற்றன.

2.கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த ஏற்கெனவே அறிவித்திருந்த தேதியை மாற்றி, டிச.5-ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3.உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 72 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மருத்துவர் கஃபீல் கான் மீது எவ்வித தவறும் இல்லை என்று அந்த மாநில அரசு நியமித்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.புதுப்பிக்கப்பட்ட எம்என்பி ( மொபைல் எண் மாறாமல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி) விதிமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நவம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குறை ஆணையமான “டிராய்’ தெரிவித்துள்ளது.

2.தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதியாளர்களின் ஊக்கச் சலுகையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

3.பொதுத் துறை நிறுவனங்கள் வசம் இருக்கும் உபரி நிலங்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில், சர்வதேச ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க உள்ளது மத்திய அரசு.


உலகம்

1.அமைதியும், நல்லிணக்கமும் உலக நாடுகளுக்கு இந்தியா விடுக்கும் செய்தி என்று ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அன்பையும், அமைதியையும் வலியுறுத்திய புத்தரைத்தான் இந்தியா உலகுக்கு அளித்தது; போரை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில்  நடைபெற்ற அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

2.சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக நுழைவு இசைவை (விசா) செப். 28 முதல் சவூதி அரேபிய அரசு வழங்குகிறது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தகைய விசா வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

3.ஐ.நா, ஜி20, டபிள்யூடிஓ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐபிஎஸ்ஏ கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, பிரேசில் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.


விளையாட்டு

1.கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் பாருபல்லி காஷ்யப் தகுதி பெற்றுள்ளார்.

2.உலக மல்யுத்த தரவரிசையில் 86 கிலோ பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா (82 புள்ளிகள்) முதலிடம் பிடித்துள்ளார்.

3.மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக செளரவ் கங்குலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 85-ஆவது பொதுக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில், கங்குலி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

4.ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் தேர்வு செய்யப்பட்டார்.

5.வுஹான் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஆர்யனா சபலென்கா, ரிஸ்கே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  • உலக ரேபிஸ் நோய் தினம்
  • பசுமை நுகர்வோர் தினம்
  • தாய்வான் ஆசிரியர் தினம்
  • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
  • அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்(1928)
  • டொரண்டோ, ஒண்டாரியோவின் தலைநகரமானது(1867)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)

– தென்னகம்.காம் செய்தி குழு