தமிழகம்

1.தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் சுமார் 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

2.புதுச்சேரியில் விரைவில் ரூ.200 கோடியில் இஎஸ்ஐ உயர்தர சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தெரிவித்தார்.


இந்தியா

1.புதிய தொலை­தொ­டர்பு கொள்­கைக்கு, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.என்.டி.சி.பி., எனப்­படும், தேசிய மின்­னணு தொலை­தொ­டர்பு கொள்கை, 2022க்குள், 10 ஆயி­ரம் கோடி டாலர் முத­லீட்டை ஈர்த்து, 40 லட்­சம் பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வகை­யில்
உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

2.அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கில், மசூதி இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3.சட்டப் பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும் என்று தலைமை தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

4.திருமணமான ஆண் அல்லது பெண், வேறொரு நபருடன் மேற்கொள்ளும் முறையற்ற உறவு என்பது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதுதொடர்பான சட்டப்பிரிவு 497-ஐ நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

5.தேர்தல் நிதி பத்திரங்களின் ஐந்தாம் கட்ட விற்பனை, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

6.மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தெலங்கானாவில் நினைவிடம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறினார்.


வர்த்தகம்

1.இந்­தியா, சீனா­வுக்கு முதன் முறை­யாக, பாசு­மதி வகை­யைச் சாராத அரி­சியை, இன்று ஏற்­று­மதி செய்ய உள்­ளது.

2.இந்திய ரியல் எஸ்டேட் துறையின் சந்தை மதிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சம் கோடி) எட்டும் என கேபிஎம்ஜி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.மாலத்தீவில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் முகமது சோலீ, தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


விளையாட்டு

1.கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • உலக ரேபிஸ் நோய் தினம்
  • பசுமை நுகர்வோர் தினம்
  • தாய்வான் ஆசிரியர் தினம்
  • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
  • அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்(1928)
  • டொரண்டோ, ஒண்டாரியோவின் தலைநகரமானது(1867)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  • தென்னகம்.காம் செய்தி குழு