தமிழகம்

1.கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன. இப்போது ஆழ்துளை கிணற்றில் சுஜித் விழுந்தது 13வது சம்பவம் ஆகும்.


இந்தியா

1.நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

2.பாஜகவின் மனோகர் லால் கட்டர், ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.


வர்த்தகம்

1.முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த காா்போரண்டம் யுனிவா்சல் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.64.5 கோடியை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது.


உலகம்

1.அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.


விளையாட்டு

1.பேஸல் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரோஜா் பெடரா்-டி மினாா் ஆகியோா் மோதுகின்றனா்.


ன்றைய தினம்

  • செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
  • முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
  • கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
  • ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)

– தென்னகம்.காம் செய்தி குழு