Current Affairs – 28 October 2018
தமிழகம்
1.இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்து அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2.நகரங்களின் மையப் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பஸ் போர்ட் எனப்படும் பேருந்து மையங்களை உருவாக்கும் புதிய திட்டத்தை தொடங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
3.தமிழகத்தில் இதுவரை 1,185 பேர் தானமாக வழங்கிய உடல் உறுப்புகள் மூலம் 6,791 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தியா
1.அமலாக்கத் துறை புதிய தலைவராக இந்திய வருவாய்த் துறை (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ராவை மத்திய அரசு சனிக்கிழமை நியமித்துள்ளது.
அமலாக்கத் துறை தலைவராக இருந்த கர்னல் சிங் ஒய்வு பெறுகிறார்.
2.தில்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானா(82), உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார்.
பாஜக மூத்த தலைவரான இவர், தில்லி முதல்வராக கடந்த 1993 முதல் 1996-ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
வர்த்தகம்
1.வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என்று யர்னஸ்ட் யங் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.இந்தியாவில் 5ஜி சோதனையை அடுத்தாண்டு முதல் காலாண்டில் மேற்கொள்ளவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 94 கோடி டாலர் (ரூ.6,600 கோடி) குறைந்து 39,352 கோடி டாலராகி (ரூ.27.54 லட்சம் கோடி) உள்ளது.
உலகம்
1.இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி வரை அதிபர் மைத்ரிபால சிறீசேனா முடக்கி வைத்துள்ளார்.
2.முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அந்த நாட்டில் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் கடைசி தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
1.பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் காலிறுதிச் சுற்றில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
இன்றைய தினம்
- செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
- முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
- கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
- ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)
- தென்னகம்.காம் செய்தி குழு