தமிழகம்

1.அரசு ஊழியர் ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் குழு தனது அறிக்கையை  தாக்கல் செய்தது.

2.ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று நடைபெறவுள்ளது.


இந்தியா

1.நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மிஸோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் வியாழக்கிழமை (நவ.29) விண்ணில் ஏவப்பட உள்ளது.

3.மாணவர்களின் புத்தகப் பை எடைக்கு புதிய வரம்பும், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லை என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


வர்த்தகம்

1.பார்லிமென்ட் நிலைக் குழு கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

2.மத்திய நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.


உலகம்

1.செவ்வாய் கிரகத்தில் புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா அனுப்பிய இன்சைட்(Insight) ஆய்வுக் கலம், அந்த கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.செவ்வாய் கிரகத்தில் ஆழமான துளைகளை இட்டு, அதன் உட்புறம் குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இன்சைட் ஆய்வுக் கலம் 6 மாதங்களுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்டது.

2.ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி  ஆர்ஜெண்டீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு சர்வதேச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேச இருக்கிறார்.

3.இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மியான்மர் நாட்டுக்கு இந்தியா ரூ.35 கோடி நிதி அளித்துள்ளது.

4.இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ள ருமேனியா வெளியுறவுத்துறை அமைச்சர் தியோடர் மெலஸ்கானு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தினர்.


விளையாட்டு

1.இந்திய மோட்டார் விளையாட்டுகளுக்கான சங்கங்கள் கூட்டமைப்பின் (எஃப்எம்எஸ்சிஐ) தலைவராக பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

2.டாடா ஓபன் சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் 11-ஆவது சீசன், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில்  தொடங்குகிறது.


ன்றைய தினம்

  • அல்பேனியா விடுதலை தினம்(1912)
  • நியூசிலாந்தில் பெண்கள் முதல்முறையாக வாக்களித்தனர்(1893)
  • பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது(1821)
  • நாசா, செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)
  • தென்னகம்.காம் செய்தி குழு