Current Affairs – 28 November 2017
தமிழகம்
1.தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
2.தமிழக ஆளுநரின் புதிய செயலாளராக ராஜகோபால் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தியா
1.மக்களவைச் செயலர் டி.கே. பல்லாவை பதவியிலிருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2.15-ஆவது நிதிக் குழுவின் தலைவராக, திட்டக் குழு முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் நியமிக்கப்பட்டார்.
3.ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கான இந்தியப் பிரதிநிதியாக பொருளாதார விவகாரத்துறை முன்னாள் செயலாளர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம்
1.தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி,அமெரிக்க டிவி நடிகை, மெகன் மார்க்கில்லை(Megan Markle) திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தகம்
1.நவம்பர் 27-ம் தேதி வரையிலான கணக்கின்படி ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 83,346 கோடியாக குறைந்துள்ளது.கடந்த செப்டம்பரில் வசூலான ரூ.92,000 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் குறைவாகும்.
2.சூரிய மின் சக்தி மானிய பயன்களை பெறுவதில், குஜராத், தமிழக விசைத்தறி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.
3.ஹைதராபாத்தில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.
விளையாட்டு
1.ஸ்பெயினில் நடைபெற்ற ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜி.சத்தியன் தங்கப் பதக்கம் வென்றார்.
2.இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல், ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 96 இடங்கள் முன்னேறி 225-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
3.இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் 8 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் விரைவாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
இன்றைய தினம்
1.1992 – அல்பேனியா – விடுதலை நாள்
2.2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
3.1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
–தென்னகம்.காம் செய்தி குழு