Current Affairs – 28 May 2019
தமிழகம்
1.தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் (2019-20) புதிதாக 15 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 78 புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2.இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்எல்ஏ.க்கள் புதன்கிழமை (மே 29) பதவியேற்க உள்ளனர்.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களால், நிகழாண்டில் கடந்த ஏப்ரல் வரை பாதுகாப்புப் படை வீரர்கள் 61 பேரும், பொதுமக்கள் 11 பேரும் உயிரிழந்தனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2.நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
3.நிலத்திலிருந்து, வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ஆகாஷ்-எம்கே-1எஸ் ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
வர்த்தகம்
1.வாராக்கடன் தொடர்பாக பெரிய நிதிநிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வங்கிகளுக்கு அனுப்பிய அறிக்கை விபரங்களை வழங்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய தகவல் ஆணையமான, சி.ஐ.சி., உத்தரவிட்டுள்ளது.
உலகம்
1.பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமைப்பில் வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. இது தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இப்போதுள்ள கிர்கிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2.உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால், வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் சுமார் 25 செ.மீ. உயரும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.பிரெஞ்சு ஓபன் போட்டி முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியடைந்தார்.
2.உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இளம் வீரர் செளரவ் செளதரி, மகளிர் பிரிவில் ராஹி சர்னோபட் ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏற்கெனவே மகளிர் பிரிவில் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றிருந்தார்.
3.தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய பசிபிக் யோகா போட்டியில் கும்மிடிப்பூண்டி பகுதி மாணவர்களான லோகேஷ், சேஷாத்திரி, ஹேமந்த்குமார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
இன்றைய தினம்
- ஆர்மீனியா குடியரசு தினம்
- பிலிப்பைன்ஸ் கொடி நாள்
- நேபாள குடியரசு தினம்
- கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)
- தமிழ் மருத்துவ முன்னோடியான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)
– தென்னகம்.காம் செய்தி குழு