தமிழகம்

1.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2.மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.


இந்தியா

1.விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்றும், செயல்பாட்டில் இருந்த செயற்கைக்கோள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.மிஷன் சக்தி திட்டம் மிகவும் கடினமானது. மிகத் துல்லியமாக கணிக்கப்பட்ட இலக்குடன், மிக அதிவேகத்தில் இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏவுகணை செலுத்தப்பட்ட மூன்றே நிமிடங்களில் இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.

2.தொலைதூர கல்வியின் மூலம் வேளாண் பட்டப்படிப்பு தடை செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

3.பிஎஸ்எல்விசி- 45 ராக்கெட், 29 செயற்கைக்கோள்களுடன் வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது.


வர்த்தகம்

1.பணப்பரிவர்த்தனை தொடர்பான ஸ்விப்ட் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (பிஎன்பி) ரூ.2 கோடி அபராதம் விதிப்பதாக ரிசர்வ் வங்கி  அறிவித்தது.


உலகம்

1.வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.


விளையாட்டு

1.இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்துவும், ஸ்ரீகாந்தும் வெற்றியுடன் தொடங்கினர். மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாயும் முதல் சுற்றில் வென்றார்.

2.ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், கலப்பு குழுவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர், சௌரவ் சௌதரி இணை தங்கம் வென்று அசத்தியது.
அத்துடன், தகுதிச்சுற்றில் 784 புள்ளிகள் கைப்பற்றி உலக சாதனையையும் இந்த இணை முறியடித்தது.

3.மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார்.


ன்றைய தினம்

  • சிலோவேக்கியா, செக் குடியரசு ஆசிரியர் தினம்
  • வேதாத்திரி மகரிஷி இறந்த தினம் (2006)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் எஸ்.சத்யமூர்த்தி இறந்த தினம்(1943)
  • கான்ஸ்டன்னீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன(1930)

– தென்னகம்.காம் செய்தி குழு