தமிழகம்

1.அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் ஆட்சியராகவும், திண்டுக்கல் ஆட்சியராக இருந்த வினய், அரியலூர் மாவட்டத்திற்கு ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

சென்னை ஆட்சியராக, இசை பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சீதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஆட்சியராக இருந்த ரோகிணி, இசை பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் ரூ.1,259.38 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் 2-ஆவது ஆலைக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


இந்தியா

1.அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான தேர்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனை ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இப்போது 11-ஆவது கட்டமாக விற்பனை நடைபெறவுள்ளது.

2.ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இந்திய மருத்துவ கவுன்சிலை (எம்சிஐ), மருத்துவர்களைக் கொண்ட குழு நிர்வகிப்பதற்கு அனுமதிக்கும் மசோதா, மக்களவையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

3.புதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடியாக 7,000 ஆசிரியர்களை நியமிக்க வகை செய்யும் மத்திய கல்வி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.


வர்த்தகம்

1.எஃப்.ஐ.இ.ஓ. எனப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராக சரத் குமார் சராஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2.இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) புதிய பிரீமியம் வருவாய் கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 5.68 சதவீதம் அதிகரித்துள்ளது.

3.பணவீக்கம் மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க மத்திய அரசு 18 பேர் கொண்ட குழுவை  அமைத்துள்ளது.


உலகம்

1.ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேவை ஒசாகா நகரில்  சந்தித்துப் பேசினார். அப்போது, சர்வதேச பொருளாதார சூழல், இந்தியாவில் ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புப் பணிகள், தலைமறைவு நிதி மோசடியாளர்கள் விவகாரம், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் சூழல்களை கையாளுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.


விளையாட்டு

1.டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலும் துரிதமாக 20 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் லாரா, சச்சின் ஆகியோரின் முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார்.


ன்றைய தினம்

  • ஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)

– தென்னகம்.காம் செய்தி குழு