தமிழகம்

1.பதினெட்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலாவுக்குப் பதிலாக நீதிபதி எம். சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நல வாரியம் உருவாக்கப்படும் என்று முதல்வர்  அறிவித்தார். காவலர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

3.டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு முடிவுகள் வரும் ஜுலை இறுதியில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
அதேபோல் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற க்ரூப்-1 தேர்வு முடிவுகள் இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும்.


இந்தியா

1.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்புக்கு மாற்றாக பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் இந்திய உயர் கல்வி ஆணையத்தை (ஹெச்இசிஐ) அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.


வர்த்தகம்

1. அமெரிக்காவின் வர்த்தகப் போரில் சிக்கியுள்ள, பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹார்லி டேவிட்சன்’, அதன் சில உற்பத்திகளுக்காக வெளிநாட்டிற்கு செல்லப் போவதாக தெரிவித்துள்ளது.


உலகம்

1.ஈரானிடம் இருந்து வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.


விளையாட்டு

1. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த ஜெர்மனி, நாக் அவுட் சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல் உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது.குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது.உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஆர்ஜென்டீனா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

2. சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி கண்டது.


ன்றைய தினம்

  • ஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)

–தென்னகம்.காம் செய்தி குழு