தமிழகம்

1.தமிழகம் முழுவதும் வரும் 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள மருத்துவமனை தினத்தை ஒட்டி அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


வர்த்தகம்

1.மின்சாதனப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹாவெல்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.2,756 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

2.பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 1,012 கோடியாக குறைந்துள்ளது.

3.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 43,037 கோடி டாலராக (ரூ.30.12 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

4.மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


உலகம்

1.இந்தியாவின் சி-17 ராணுவ போக்குவரத்து விமானங்களுக்கு ரூ.4,613 கோடி (670 மில்லியன் டாலர்) மதிப்பில் பாகங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2.மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதி பயன்படுத்தப்படுவதற்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


விளையாட்டு

1.தேசிய மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் பக்தி குல்கர்னி.

2.தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தங்கம் வென்றார். இப்போட்டியில் 4 வெள்ளி, 3 வெண்கலத்தையும் வென்றது இந்தியா.

3.மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், சென்னை ஐசிஎப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


ன்றைய தினம்

  • உலக கல்லீரல் நோய் தினம்
  • பெரு விடுதலை தினம்(1821)
  • முதல் உலகப் போர் ஆரம்பமானது(1914)
  • முதல் முறையாக பிரிட்டனில் உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது(1586)

– தென்னகம்.காம் செய்தி குழு