தமிழகம்

1.இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, தைவான் உள்ளிட்ட 20 நாடுகளின் உயர்தர சர்வதேச மருத்துவக் கருவிகள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது.

2.சரக்கு -சேவை வரி விதிப்பால் (ஜி.எஸ்.டி.), தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக வணிகவரி துறை ஆணையர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார்.


இந்தியா

1.மின்னணு முறையில் பாதுகாக்கப்பட்டு வரும் தனிநபர்களின் தகவல் உள்பட பல்வேறு முக்கிய விவரங்களைப் பாதுகாப்பது குறித்து மத்திய அரசிடம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான உயர் நிலைக் குழு அறிக்கை அளித்துள்ளது.

2.ரயில்களில் பயணிகள் சாப்பிட்ட பிறகு அவர்களிடம் உள்ள குப்பைகளை, ரயில்வே உணவக பணியாளர்கள் பைகளுடன் சென்று சேகரிப்பர் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1. சென்ற நிதி ஆண்டில் பால் உற்பத்தி 17.63 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது.


உலகம்

1.பிரான்ஸ் நாட்டைக் கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள், இனி விமான நிலைய பயணவழி விசா வைத்திருக்கத் தேவையில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.

2.பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதையடுத்து, அவரது தலைமையில் கூட்டணி அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.1950-53 ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றகொரியப் போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை அமெரிக்காவிடம் வடகொரியா வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.

4.உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானின் சியோ மியாகோ, மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
117 வயதாகும் மியாகோ, கடந்த 1901-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர். தெற்கு ஜப்பானைச் சேர்ந்த நபி தஜிமா தனது 117-ஆவது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் மறைந்ததைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் என்ற பட்டம் மியாகோவுக்கு வழங்கப்பட்டது.


விளையாட்டு

1.இந்திய மகளிர் வில்வித்தை அணி (காம்பவுண்ட்) உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அண்மையில் அன்டாலியா, பெர்லினில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய காம்பவுண்ட் பிரிவு மகளிர் அணி 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றிருந்தது.

2.டைமண்ட் லீக் தடகள போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • உலக கல்லீரல் நோய் தினம்
  • பெரு விடுதலை தினம்(1821)
  • முதல் உலகப் போர் ஆரம்பமானது(1914)

–தென்னகம்.காம் செய்தி குழு