தமிழகம்

1.இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மதுரையை அடுத்த தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் திறப்பு விழா மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


இந்தியா

1.நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 47.68 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகளும் தேக்கமடைந்துள்ளன.

2.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ரயிலுக்கு “வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். முன்னதாக “டிரெயின் -18′ என்று அந்த ரயில் அறியப்பட்டது. இந்த ரயில் தில்லியில் இருந்து வாராணசிக்கு இயக்கப்படவுள்ளது.


வர்த்தகம்

1.பொறியியல், கட்டுமான துறையில் ஈடுபட்டு வரும் எல் அண்டு டி நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.2,041 கோடி லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.சீன நிறுவன அதிகாரி கைது விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய சீனாவுக்கான கனடா தூதரை அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி நீக்கம் செய்துள்ளார்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம், இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ஜோகோவிச்.

2.இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் ஆனார்.


ன்றைய தினம்

  • சர்வதேச தொழுநோய் தினம்
  • அர்மேனியா ராணுவ தினம்
  • சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
  • இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
  • அலெக்சாண்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)

– தென்னகம்.காம் செய்தி குழு