இந்தியா

1.டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் அணிவகுத்த பல்வேறு பாதுகாப்பு படைகளில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை சிறந்த அணிவகுப்புக்கான விருதை வென்றுள்ளது.மாநில அரசுகள் சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகளில் மராட்டிய மாநில ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
2.கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெண் இமாம் ஜமிதா ஜும்மா தொழுகைக்கு தலைமை தாங்கியதுடன் குத்பா பேருரையும் நிகழ்த்தியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம் (World Lebrosy Eraication Day).
தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். தொழுநோயாளிகள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள்மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை 2006ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு