Current Affairs – 28 February 2019
தமிழகம்
1.தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு 12 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 12 ஆயிரத்து 294 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2.பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வினை மொத்தம் 8.87 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
இந்தியா
1.நடுவானில் இருநாடுகளின் போர் விமானங்கள் இடையே நடைபெற்ற சண்டையில், பாகிஸ்தானுக்கு சொந்தமான எப்.16 ரக போர் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இதேபோல், இந்திய விமானமும் பாகிஸ்தான் விமானத்தின் தாக்குதலுக்கு இலக்காகி தரையில் விழுந்தது. அதில் இருந்த விமானி, பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளார்.
2.ரூ.2,700 கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
வர்த்தகம்
1.நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி.,யில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மோசடி தடுப்பு நடவடிக்கைகளை, வரித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
2.இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி, ஜனவரி மாதத்தில், 91.8 லட்சம் டன் என்றும், இது முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, 2 சதவீதம் குறைவு என்றும், உலக உருக்கு சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம்
1.பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்கப்படுவதை அடியோடு ஒழிக்க இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் உறுதி பூண்டுள்ளன.
சீனாவின் வூஷென் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
2.நேபாளத்தில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று புதன்கிழமை விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் அந்நாட்டு சுற்றுலாத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரவீந்திர அதிகாரி (39) உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு
1.தில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற குழு பிரிவு இறுதிச் சுற்றில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌதரி, மானு பேக்கர் இணை 483.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.
2.விளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கேலோ இந்தியா என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
இன்றைய தினம்
- இந்திய தேசிய அறிவியல் தினம்
- இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
- முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)
- வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
- எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)
– தென்னகம்.காம் செய்தி குழு