தமிழகம்

1.கரூர்-சேலம் ரயில் பாதை மின் மயமாக்கல் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டம்  நடைபெறுகிறது.

2.வளர்ந்து வரும் மாவட்டங்கள் பட்டியலில், விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஒடிஸாவின் நெளபடா மாவட்டம் இரண்டாம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டத்தை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


இந்தியா

1.முத்தலாக் முறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.

2.போலியான வாகன பதிவெண் தட்டுகளை கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது.


வர்த்தகம்

1.இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சேவை நிறுவனங்களின் வளர்ச்சி அடுத்த மூன்றாண்டுகளுக்கிடையில் 9-12 சதவீதமாக இருக்கும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

2.புதிய தங்க கொள்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.


உலகம்

1.ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தனது தூதரகத்தை ஐக்கிய அரபு அமீரகம் வியாழக்கிழமை மீண்டும் திறந்தது.

2.பிரிட்டனில் கேட்விக் விமான நிலையத்தை பிரான்ஸின் வின்சி குழுமம் கையகப்படுத்துகிறது.


விளையாட்டு

1.தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதித் தேர்வுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் முதலிடம் பிடித்தார்.


ன்றைய தினம்

  • இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது (1885)
  • கலிலியோ கலிலி, நெப்டியக்ஷன் கோளைக் கண்டுபிடித்தார்(1612)
  • தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன(1836)
  • லண்டனில் வெஸ்ட்மின்ஸ்ட் தேவாலயம் திறக்கப்பட்டது(1065)

– தென்னகம்.காம் செய்தி குழு