தமிழகம்

1.புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லாச் (என்.ஓ.சி) சான்று கிடைக்காது என்று சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் எது பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்ற கணக்கீட்டை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இந்திய அளவில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும், பெண்களுக்கு எதிராக மிக மோசமான குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நகராக நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளது.
2.ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பின்னணிப் பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட இருக்கிறது. கேரள அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
3.உச்ச நீதிமன்ற வரலாற்றில் விடுமுறை கால அமர்வைத் தலைமை தாங்கும் முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையை நீதிபதி தீபக் மிஸ்ரா பெற்றுள்ளார் .
4.இமாச்சல பிரதேச மாநில 13-வது முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் 10 மந்திரிகளுடன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆச்சாரியா தேவ் வ்ராட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


விளையாட்டு

1.கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.


இன்றைய தினம்

1.1065 – லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு