Current Affairs – 28 August 2019
தமிழகம்
1.தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் காகிதமில்லாத நடைமுறை கொண்டு வரப்படும் என்று வருவாய்-தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
2.விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஜவுளி பதனிடும் குழுமம், புதிய தொழில் பூங்கா ஆகியவற்றுக்கு முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
வர்த்தகம்
1.ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 54 காசுகள் உயர்ந்து 71.48-ஐ எட்டியது. 2019-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதியிலிருந்து ரூபாய் மதிப்பு ஒரே நாளில் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை என அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உலகம்
1.அமேசான் மழைக்காடுகளில் பற்றியுள்ள தீயை அணைப்பதற்காக ஜி7 உறுப்பு நாடுகள் வழங்க முன்வந்துள்ள 2 கோடி டாலர் (சுமார் ரூ. 143 கோடி) உதவித் தொகையை பிரேசில் நிராகரித்துவிட்டது.
2.இயந்திர மனிதனை ஏற்றிச் சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
விளையாட்டு
1.உலக பாரா பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.1.82 கோடி நிதியுதவியை செவ்வாய்க்கிழமை வழங்கினார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.
மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளும் அதிக ஊக்கத் தொகை பெறும் வகையில் கொள்கையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
2.தில்லியில் உள்ள பிரசித்தி பெற்ற பெரோஸ்ஷா கோட்லா மைதானத்துக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெயர் சூட்டப்படுகிறது.
இன்றைய தினம்
- வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
- ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
- குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
- சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
- காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
– தென்னகம்.காம் செய்தி குழு