தமிழகம்

1.இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 லட்சம் நூல்கள் வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

2.சிவந்தி ஆதித்தன், ராமசாமி படையாச்சியார் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைப்பதற்கான நிர்வாக அனுமதிகளையும், நிதிகளையும் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3.சென்னையில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள 15 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


இந்தியா

1.தெற்கு துரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் மேகாலய முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.இந்தியாவில் முதல்முறையாக உயிரி (பயோ) எரிபொருள் மூலம் விமானம் திங்கள்கிழமை இயக்கப்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.ஜி.எஸ்.டி.,யால் பெறும் உள்­ளீட்டு வரிப் பயனை, மக்­க­ளுக்கு அளிக்­காத நிறு­வ­னங்­கள் மீது, புகார் தெரி­விக்க, உதவி மையம் துவங்­கப்­பட்­டுள்­ளது.


உலகம்

1.மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது இன அழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு வலியுறுத்தியுள்ளது.
2.இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இந்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளது.
3.வியத்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்தார்.


விளையாட்டு

1.ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய  வீராங்கனைகள் பி.வி.சிந்து முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து வரலாறு படைத்தார். அதே நேரத்தில் 36 ஆண்டுகள் பதக்க வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வெண்கலம் வென்றார் சாய்னா.
ஆசியப் போட்டி மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்திய அணி 7 தங்கம், 12 வெள்ளி, 20 வெண்கலம் என 38 பதக்கங்களுடன் 9-ம் இடத்தில் உள்ளது.


ன்றைய தினம்

  • வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
  • ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
  • குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
  • சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
  • காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
  • தென்னகம்.காம் செய்தி குழு