தமிழகம்

1. புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.


இந்தியா

1.ஜான்சன் – ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,414 கோடி டாலராக சரிந்துள்ளது.

2.ரூ.20 மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடவிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


உலகம்

1.சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வழித்தட திட்டத்தின் இரண்டாவது கூட்டத்தில், 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.4 லட்சம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

2.சர்வதேச ஆயுத விற்பனை ஒப்பந்தத்திலிருந்து விலகவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் அபிஷேக் வர்மா. மேலும் அதே நேரத்தில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

2.ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, பூனம் யாதவ் உள்ளிட்ட 4 பேருக்கு அர்ஜுனா விருது வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

3.ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியது.


ன்றைய தினம்

  • அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது(1920)
  • மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது(1932)
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் இறந்த தினம்(1942)
  • அமெரிக்காவின் 7வது மாகாணமாக மேரிலாந்து இணைக்கப்பட்டது(1788)

– தென்னகம்.காம் செய்தி குழு