தமிழகம்

1.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசு அறிவித்த தேதியில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் இரண்டு நிமிடத்தில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

2.நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1989-ல் பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். இந்து மல்கோத்ரா நாட்டின் 7-வது பெண் நீதிபதி ஆவார்.


உலகம்

1.அமெரிக்க வெளியுறவு அமைச்சராக சிஐஏ முன்னாள் இயக்குநர் மைக் போம்பியோ  நேற்று பதவியேற்றார்.


விளையாட்டு

1.ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் கால் இறுதியில்  தோல்வியடைந்தனர்.சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்.


ன்றைய தினம்

1. வேலையின்  பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்

 

–தென்னகம்.காம் செய்தி குழு