தமிழகம்

1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் உலகத் தமிழிசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வரும் டிச. 14, 15 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

2.தமிழகத்தில் ரூ.7,175 கோடியில் புதிய தொழில் திட்டங்களுக்கான பூர்வாங்கப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

3.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரூ.109 கோடி மதிப்பிலான 370 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.


இந்தியா

1.சென்னையில் “இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019′ நிகழ்ச்சி (செப். 28) தொடங்குகிறது. முதல்முறையாக சர்வதேச கூட்டு நிகழ்ச்சியாக சிங்கப்பூருடன் இணைந்து இதை இந்தியா நடத்துகிறது.

2.பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் 1.23 லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 90 லட்சமாக அதிகரித்துள்ளது.


வர்த்தகம்

1.ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

2.இணையத்தை பயன்படுத்துவோரில் 15 சதவீதம் பேரின் வயது 5 முதல் 11-க்குள் இருப்பதாக இண்டர்நெட் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (ஐஏஎம்ஏஐ) தெரிவித்துள்ளது.நடப்பாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 45.10 கோடியைத் தொட்டுள்ளது. இதில், 38.5 கோடி பேர் 12 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 5-11 வயதுடையோர் 6.6 கோடி பேர். இணையதள பயனாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 12-29 வயதுக்குள்பட்டவர்கள்.
இந்திய நகர்புறங்களில் 19.2 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.


உலகம்

1.ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரான் அதிபர் ஹசன் ரெளஹானியை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

2.இரண்டாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி வரும் நவம்பர் 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறவுள்ளது. இப்பொருட்காட்சியில் பங்கேற்பதை, தற்போது வரை, 60க்கும் அதிகமான நாடுகள் உறுதி செய்துள்ளன.


விளையாட்டு

1.கொரிய ஓபன் பாட்மிண்டன் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் பருபல்லி காஷ்யப் தகுதி பெற்றுள்ளார்.

2.மும்பையில் வரும் அக். 1-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் பிரகனாநந்தா தலைமையிலான இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் மொத்தம் 6 உலக சாம்பியன் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
66 நாடுகளைச் சேர்ந்த 56 சாம்பியன்கள், 3 கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்கின்றனர்.


ன்றைய தினம்

  • உலக சுற்றுலா தினம்
  • கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)

– தென்னகம்.காம் செய்தி குழு