தமிழகம்

1.தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம் ரூ. 288 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின்கீழ் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் என அரசின் கருவூல கணக்குத் துறை ஆணையர், முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் கூறினார்.

2.கடந்த 1865-ஆம் ஆண்டில் இருந்து 2009-ஆம் ஆண்டு ஜூலை வரையிலான 144 ஆண்டுகள் பழைமையான பதிவு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.

3.புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 124 பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
புதுவை சுற்றுலாத் துறை, பிக்யூர் பிளிக் என்ற இந்திய சினிமா ஸ்டிரீமிங் நிறுவனம் ஆகியவை இணைந்து சர்வதேச திரைப்பட விழாவை முதல் முறையாக புதுச்சேரியில் நடத்துகின்றன.


இந்தியா

1.மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி சிம் கார்டு, பள்ளி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் ஆதார் கட்டாயமில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்
பட்டுள்ளது.

2.அரசமைப்புச் சட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் நீதிமன்ற விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும், ஒளிப்பதிவு செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

3.இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) பெயர், இந்திய டிஜிட்டல் தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணையம் (டிசிஆர்ஏஐ) என்று மாற்றப்பட இருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

4.அஸ்திரா ஏவுகணையை இந்தியா  வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.

5.இந்திய மருத்துவக் கவுன்சிலை வழிநடத்துவதற்காக குழு அமைப்பதற்கு வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

6.புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கும், சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.4,500 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது.


உலகம்

1.சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்துவதற்காகவும், வரும் 2022- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும், பிரதமர் மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சிங்லென்சனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கியை, உலகின் 51-ஆம் நிலை வீராங்கனையான பியூர்டோ ரிகோவின் மோனிகா பிக் வீழ்த்தினார்.


ன்றைய தினம்

  • உலக சுற்றுலா தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  • கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)
  • தென்னகம்.காம் செய்தி குழு