தமிழகம்

1.பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையைச் சேர்ந்த யோகா பாட்டி நானம்மாள் காலமானார். அவருக்கு வயது 99. குடியரசுத் தலைவரிடமிருந்து பெண்சக்தி விருதைப் பெற்றுள்ளாா். மத்திய அரசு இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் 2018 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.


இந்தியா

1.திருப்பதியில் உள்ள விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக 10 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் துா்காபிரசாத் தெரிவித்தாா்.

2.நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டில் நாள்தோறும் 350 குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக குழந்தை உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

3.மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கும் அதிகமான முதியோா் தோ்தல்களில் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 6 சதவீதம் குறைந்துள்ளது.

2.டிஜிட்டல் தள சேவைகளுக்காக ரூ.1.08 லட்சம் கோடி முதலீட்டில் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனத்தை தொடங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

3.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 44,000 கோடி டாலரைக் கடந்து சாதனை படைத்தது.

4.பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் மூலம் ரயில்வே துறை ஈட்டும் வருவாய், நிகழ்நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளது.பயணிகள் கட்டண வருவாய் ரூ.155 கோடியும், சரக்குக் கட்டண வருவாய் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வா்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபருக்கான வா்த்தக ஆலோசகா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2.இஸ்ரேலில் வீரமரணமடைந்தவரின் நினைவாக கட்டப்பட்ட 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது ரோம பேரரசின் தொடர்ச்சியான பைஸாட்டிய மரபு (Byzantine-era church ) வழிவந்த ஒரு வீரர் என்று கூறப்படுகிறது.

3.இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 600 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.42,500 கோடி) கடனுதவி வழங்குவது தொடரும் என்று உலக வங்கியின் தலைவா் டேவிட் மால்பாஸ் கூறினாா்.


விளையாட்டு

1.உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்றாா் இந்தியாவின் தீபக்.சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக 46-59 கிலோ பிளை வெயிட் பிரிவு குத்துச்சண்டை இறுதிச் சுற்று ஆட்டம் நடந்தது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரா் தீபக்-கஜகஸ்தானின் ஜுஸ்போவ் டெம்ரிடாஸுடன் மோதினாா். இதில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று டெம்ரிடாஸ் தங்கம் வென்றாா்.


ன்றைய தினம்

  • அமெரிக்க கடற்படை தினம்
  • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)

– தென்னகம்.காம் செய்தி குழு