தமிழகம்

1.ரயில் நிலையத்துக்குள் இருந்தவாறே யுடிஎஸ் என்னும் முன்பதிவு இல்லாத டிக்கெட் சேவையை செல்லிடப்பேசி செயலி மூலம் பெறும் வகையிலான க்யூஆர் கோடு முறை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2.சென்னை உயர்நீதிமன்ற 3ஆவது நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளனர்.


இந்தியா

1.தென்மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.


உலகம்

1.இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச, அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு அதிபர் சிறீசேனா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் வெள்ளிக்கிழமை செய்து வைத்தார்.

2.ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் முழு வீச்சில் அமலுக்கு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.புடாபெஸ்டில் நடைபெற்று வரும்உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியா வீராங்கனை பூஜா தண்டா.

2.பிரஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.


ன்றைய தினம்

  • அமெரிக்க கடற்படை தினம்
  • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
  • தென்னகம்.காம் செய்தி குழு