தமிழகம்

1.ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2.பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

2. ஜம்​மு-​காஷ்​மீர் மாநி​லத்​துக்கு சிறப்பு அந்​தஸ்து அளிக்க வகை செய்​யும் அர​சி​ய​ல​மைப்பு சட்டத்​தின் 370ஆவது பிரி​வுக்கு எதி​ராக தொடுக்​கப்​பட்ட புதிய மனுவை விசா​ரிக்க உச்​ச​நீ​தி​மன்​றம்
மறுத்​து​விட்​டது.

3.மாணவர்களின் புத்தகப் பை எடைக்கு புதிய வரம்பும், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லை என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


வர்த்தகம்

1.மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.42,000 கோடி மூலதனத்தை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கவுள்ளது.

2.இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் ‘டெக்ஸ் வேலி’ இணைந்து நடத்தும், ‘வீவ்ஸ்’ என்ற தென் மாநில ஜவுளி கண்காட்சி, டிசம்பர் 5 முதல் 8ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறுகிறது.

3.அன்னிய முதலீட்டாளர்கள், அக்டோபர் மாதத்தில், இந்திய மூலதன சந்தையிலிருந்து, தங்களது பெருவாரியான முதலீட்டை எடுத்த நிலையில், அதற்கு மாறாக, இந்த மாதம் இதுவரை, 6,310 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளனர்.

4.உள்நாட்டில் பால் உற்பத்தி கடந்த நான்கு ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார்.


உலகம்

1.கிரைமீயா தீபகற்பம் அருகே, உக்ரைன் கடற்படைக்குச் சொந்தமான 3 போர்க் கப்பல்களை ரஷியா பிடித்து வைத்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

2.இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள மாலத்​தீ​வின் வெளி​யு​ற​வுத்​துறை அமைச்​சர் அப்​துல்லா ஷாகித், தில்​லி​யில் வெளி​யு​றவு அமைச்​சர் சுஷ்மா ஸ்வ​ராஜை திங்​கள்​கி​ழமை சந்​தித்து பேச்​சு​ நடத்​தி​னார்.


விளையாட்டு

1.தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான டிராப் பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் வர்ஷா வர்மன்  சாம்பியன் பட்டம் வென்றார்.

2.ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் நிலையில் அதற்கான பயிற்சியாக இந்தியா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி ஓமனுடன் அபுதாபியில் மோதுகிறது.


ன்றைய தினம்

  • அமெரிக்க ராணுவ போர் கல்லூரி நிறுவப்பட்டது(1901)
  • போலந்து அரசியலைப்பு பெறப்பட்டது(1815)
  • கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ரொஸ் மாக்வேர்ட்டர் இறந்த தினம்(1975)
  • ரத்மலானை விமான நிலையத்திற்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது(1935)
  • பாரிசில் ஆல்பிரட் நோபல், நோபல் பரிசு திட்டத்தை தெரிவித்தார்(1895)
  • தென்னகம்.காம் செய்தி குழு