Current Affairs – 27 November 2017
தமிழகம்
1.அராய்(ARAI) நிறுவனத்தின் தரச்சான்றுடன் கூடிய மாதிரிப் பேருந்துகள் தமிழகத்தில் முதன்முதலாக கரூரில் உருவாக்கப்பட்டுள்ளன.2,000 புதிய பேருந்துகள் அராய் நிறுவனத் தரச்சான்றுடன் தயாரிக்கப்பட்டு இன்னும் 4 மாதங்களில் இயக்கப்படும்.
இந்தியா
1.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
2.உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குநராக, செளமியா சுவாமிநாதன் அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ளார்.
3.புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் உள்ளிட்டவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான என்பிபிஏ நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
உலகம்
1.உலகிலேயே முதல்முறையாக கேள்விகள் கேட்டால் பதில் சொல்லும் செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி நியூசிலாந்தைச் சேர்ந்த நிக் ஜெரிட்சன் சாதனை.
வர்த்தகம்
1.மத்திய அரசு, ஆயத்த ஆடைகள் மற்றும் இல்லப் பயன்பாட்டு ஜவுளி வகைகளின் ஏற்றுமதிக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை, 2 சதவீதம் உயர்த்தி உள்ளது
விளையாட்டு
1.கவுகாத்தியில் நடைபெற்ற உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கம் வென்றது.
2.சீனாவில் நடைபெற்ற 16-ஆவது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கோபி தொனகல் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் கோபி.
3.ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இன்றைய தினம்
1.2001 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
–தென்னகம்.காம் செய்தி குழு