தமிழகம்

1.சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 13 பேரும் செவ்வாய்க்கிழமை (மே 28) பதவியேற்க உள்ளனர்.

2.2019 மக்களவைத் தேர்தலுடன் இணைந்து காலியாக உள்ள தமிழக சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து பேரவையில் திமுகவுக்கு எண்ணிக்கை 101 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.


இந்தியா

1.மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

2.ஒடிஸாவில் ஆட்சியமைக்கும்படி பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் கணேஷி லால் அழைப்பு விடுத்துள்ளார்.

3.மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 43 % பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.பொதுத் துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில், 1.20 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலித்துள்ளன. திவால் சட்ட நடவடிக்கைகளால், வாராக்கடன் வசூல், இரு மடங்கு உயர்ந்துள்ளது.


உலகம்

1.வெனிசூலாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நார்வேயில் நடைபெறவிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவிருப்பதாக தேசிய நாடாளுமன்றத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜுவான் குவாய்டோ அறிவித்துள்ளார்.

2.ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தொடங்கிய தேர்தல், ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.


விளையாட்டு

1.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்úஸா சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

2.ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3.ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா.


ன்றைய தினம்

  • நைஜிரியா குழந்தைகள் தினம்
  • பொலீவியா அன்னையர் தினம்
  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)
  • ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்(1703)

– தென்னகம்.காம் செய்தி குழு