தமிழகம்

1.தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்புவதையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
2.சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கான விடுதி ஞாயிற்றுக்கிழமை (மே 27) திறக்கப்பட உள்ளது.இந்த விடுதிக்கான ஒரு நாள் வாடகைக் கட்டணம் ரூ.300 ஆகும். இதற்கான முன்பதிவு தமிழக சட்டப் பேரவையின் இணையதளத்தின் வழியாக ஆன்-லைனில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்தியா

1.உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் வீட்டுக் கழிவறையுடன் செல்ஃபி எடுத்து சமர்பித்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும் என நீதிபதி கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2.ரயில் நிலைய கழிப்பறைகளில் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் ஆணுறைகளை விற்பனை செய்ய உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் ஐந்தாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டெக் மஹிந்திராவின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு உயர்ந்துள்ளது.நான்காவது காலாண்டில் வருவாய் 7.5 சதவீதம் அதிகரித்து ரூ.8,054 கோடியை எட்டியுள்ளது. நிகர லாபம் ரூ.588 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.1,222 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த 2017-18 முழு நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 35 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.3,800 கோடியாகி உள்ளது.


உலகம்

1.ஜப்பானில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இரண்டு ‘யூபாரி’ முலாம்பழங்கள், 32 லட்சம் யென்னுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 லட்சம்) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.


விளையாட்டு

1.தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி பயிற்சி முகாமுக்கு 48 வீராங்கனைகளை ஹாக்கி இந்தியா தேர்வு செய்துள்ளது.தேசிய பயிற்சி முகாம் வரும் 28-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோயர்ட் மார்ஜின் தலைமையில் முகாம் நடக்கிறது.


ன்றைய தினம்

  • 1.1937-கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு