தமிழகம்

1.இயன்முறை மருத்துவக் கவுன்சிலுக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பி.முருகன் கவுன்சிலின் தலைவராகவும், எஸ்.கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, டாக்டர்கள் விஜயகுமார், சபிதா, ராமகிருஷ்ணன் ஆகியோரும், அருணா, கார்த்திகேயன், செந்தில் செல்வம், தேசிகாமணி, செந்தில்குமார் ஆகிய 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.சென்னை மாவட்டத்தின் 2 மக்களவைத் தொகுதி பொதுத் தேர்தல், பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் பணிகளைப் பார்வையிட மத்திய பொது, காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியா

1.ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம், மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது

2.மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மிகவும் ஏழ்மையில் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயாக ஆண்டுக்கு தலா ரூ.72,000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.


வர்த்தகம்

1.வாராக் கடன் தொடர்பாக, திவால் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம், 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.


உலகம்

1.மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து அந்த நாட்டு நாடாளுமன்றம் கைப்பற்றியது.

2.பிரேசில் முன்னாள் அதிபர் மிஷெல் டெமெர் (78) , சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் பிரிவில் பெடரர், கெவின் ஆண்டர்சன் ஆகியோர் 4-ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


ன்றைய தினம்

  • சர்வதேச தியேட்டர் தினம்
  • மல்தோவா, பேசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
  • ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்(1513)
  • டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையே நடுநிலை ஏற்பட்டது(1794)

– தென்னகம்.காம் செய்தி குழு