உலகம்

1.அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு, வர்த்தக அமைப்பு பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது.
2.மலேசியாவில் பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளது.


விளையாட்டு

1.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகியதால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று உலகத் திரையரங்க தினம்(World Theater Day).
யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு