Current Affairs – 27 June 2019
தமிழகம்
1.சுகாதாரத்தில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2.தமிழக காவல்துறையில் 26 ஐ.பி.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் 13 அதிகாரிகள் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தியா
1.ரா உளவு அமைப்பு, ஐ.பி. புலனாய்வு அமைப்பு ஆகியவற்றுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி சமந்த் குமார் கோயலை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஐ.பி. புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் குமாரை நியமிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. 2 பேரின் பதவிக்காலமும் 2 ஆண்டுகள் ஆகும்.
வர்த்தகம்
1.நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்தின் பதவிக் காலம், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2.பொதுத் துறை வங்கிகள், தங்களிடம் கடன் வாங்கியவர்களின் சொத்துக்கள் மற்றும் கணக்குகள் குறித்து கேட்டால், அத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என, வருமான வரித் துறையினருக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
உலகம்
1.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராவதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன. இந்த சபையின் முக்கிய அங்கமான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகள் உள்ளன.
இந்த கவுன்சிலுக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் 5 தற்காலிக உறுப்பினர்களை ஐ.நா. சபை தேர்வு செய்து அனுப்பி வருகிறது.
2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே 3-ஆவது சந்திப்பை நடத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ரகசியமாக ஆலோசித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காலிறுதி ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன. இதில் நெதர்லாந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது முதல் முறையாகும்.
இன்றைய தினம்
- உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
- உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
- கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
- சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)
– தென்னகம்.காம் செய்தி குழு