தமிழகம்

1.தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2.தென் மண்டலத்தில் உள்ள 660 அஞ்சலகங்கள், ஒருங்கிணைந்த ஆன்-லைன் வசதியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல்துறை தென் மண்டல இயக்குநர் பவன் குமார் தெரிவித்தார்.

3.நாட்டிலேயே முதன்முறையாக, நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் குறித்த வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக லண்டனைச் சேர்ந்த தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை ஆய்வு தெரிவிக்கிறது.

2.ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி போர்வைக்கு பதிலாக நைலான் போர்வையை அளிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

3.ஜூலை-1 ஆம் தேதியை ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

4.மத்திய அரசு பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றும்போது வழங்கப்படும் மிகை ஊதியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5.மொபைல் போன் மூலம் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெறும் வசதியுடன் கூடிய பாஸ்போர்ட் சேவா ஆப்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1. மத்திய அரசின் கடன் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் ரூ.76.94 லட்சம் கோடியாக அதிகரித்தது.

2.ரியல் எஸ்டேட் துறையில், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்த்த, 73 நாடுகளில், இந்தியா, 19வது இடத்தை பிடித்துள்ளது.


உலகம்

1.ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த தடை செல்லும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) முடிவுக்கு, அந்த நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.


விளையாட்டு

1. போர்ச்சுகல் அணிக்கும், ஈரான் அணிக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.பிரான்ஸ்-டென்மார்க் அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.ஸ்பெயின்-மொராக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது.

2. தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். இதையடுத்து, உலகளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

3.கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய  வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி உள்ளார்.

4.கொல்கத்தாவில் நடைபெறும் சியட்-யுடிடி டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா அபார வெற்றி பெற்றார்.


ன்றைய தினம்

  • உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
  • உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
  • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
  • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)
  • சர்வதேச குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தினம்

–தென்னகம்.காம் செய்தி குழு