தமிழகம்

1.அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.தமிழ்நாடு, புதுச்சேரியின் முதன்மை தலைமை வருமானவரித் துறை ஆணையராக ராஜீவ் ஜெயின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

3.தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பான முன்னோட்டப் பணி வரும் ஆக. 12- ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

4.செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டார்.


இந்தியா

1.4-ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா வெள்ளிக்கிழமை (ஜூலை 26) பதவியேற்றுக் கொண்டார். அவரது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

2.ஏற்கெனவே 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மோஹபாத்ரா தெரிவித்துள்ளார்.

3.பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புகளை அதிகரிக்கும் விதமாகக் கொண்டு வரப்பட்டுள்ள கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா, மக்களவையில்  நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேறுவதால் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4.நிதித்துறை முன்னாள் செயலர் சுபாஷ் சந்திர கர்க், மின்துறைச் செயலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


வர்த்தகம்

1.கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 31 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

2.இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் இழப்பு முதல் காலாண்டில் ரூ.4,873.9 கோடியாக குறைந்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க அரசு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் நிறுத்திவைத்துள்ள மரண தண்டனை நிறைவேற்றங்களை மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் டெஸ்ட் ஹாக்கி போட்டிக்கான இந்திய மகளிரணி, ராணி ராம்பால் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

  • முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்த தினம்(2015)
  • தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)
  • 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
  • பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
  • பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)

– தென்னகம்.காம் செய்தி குழு