தமிழகம்

1.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சங்கமம் என்னும் இந்திய தமிழ்ச் சங்கங்களின் மாநாடு இன்று தொடங்குகிறது.


இந்தியா

1.ஆசியாவின் நோபல் விருது என்று அறியப்படும் ரமோன் மகசேசே விருது, இந்தியர்கள் 2 பேருக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.மனரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான முறையில் சேவையாற்றியதற்காக பாரத் வாத்வானிக்கு மகசேசே விருது அறிக்கப்பட்டுள்ளது. சோனம் வான்சக்குக்கு, வட இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தங்களை செய்ததற்காக விருது வழங்கப்படவுள்ளது.

2.காசோலை மோசடி சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

3.மேற்கு வங்கத்தை ‘பங்ளா’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1. வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு மத்திய அரசு தனது இறுதி ஒப்புதலை வழங்கியது.

2.வணி­கர்­கள் சுல­ப­மாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்ய உரு­வாக்­கி­யுள்ள புதிய வரைவு
படி­வம், வரும், 30ம் தேதி வெளி­யி­டப்ப­டு­கிறது.


உலகம்

1.பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதையடுத்து, அவர் அந்த நாட்டின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

2.பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தார்பார்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் ஹிந்து எம்.பி.யாக மகேஷ் குமார் மலானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3.இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துதற்கான மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சட்டத்தின் மூலம், அமெரிக்கா தனது முக்கிய ராணுவ நட்பு நாடுகளுக்கு நிகராக இந்தியாவை மதிப்பை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.


விளையாட்டு

1.உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாகிஸ்தானிடம் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா தோல்வியடைந்து வெளியேறியது.

2.உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் அயர்லாந்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.


ன்றைய தினம்

  • முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்த தினம்(2015)
  • தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)
  • 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
  • பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
  • பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)

–தென்னகம்.காம் செய்தி குழு