தமிழகம்

1.மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு ரூ.1,264 கோடியில் கட்டப்பட உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரை அருகேயுள்ள தோப்பூரில் 201.75 ஏக்கரில் இந்த மருத்துவமனை அமைய உள்ளது.


இந்தியா

1.2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ, 14 பேருக்கு பத்ம பூஷண், 4 பேருக்கு (மொத்தம் 112) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில், 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 விவசாயிகள், 11 மாநிலங்களைச் சேர்ந்த 14 மருத்துவர்கள், விளையாட்டு துறையினர் 9 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளால், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும் என ஜப்பானைச் சேர்ந்த தரகு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது.

2.இந்திய நிறுவனங்களின் இணைத்தல்-கையகப்படுத்துதல், தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகள் கடந்த 2018-ஆம் ஆண்டில் 11,000 கோடி டாலராக இருந்தது என கிராண்ட் தோர்ன்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.இந்திய ஸ்மார்ட்போன் சந்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என கவுன்டர்பாயின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.நாட்டின் 70-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, அண்டை நாடான நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசளித்துள்ளது.


விளையாட்டு

1.ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒஸாகா, செக் குடியரசு வீராங்கனை குவிட்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

2.இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவை 18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் இந்தியாவின் சாய்னா நெவால்.


ன்றைய தினம்

  • சர்வதேச படுகொலை நினைவு தினம்
  • தாமஸ் எடிசன், வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்(1880)
  • தேசிய புவியியல் கழகம் வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது(1888)
  • ஜான் லோகி பயார்ட், முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினார்(1926)
  • சர்வதேச படுகொலை நினைவு தினம் முதன் முதலில் ஜெர்மனியில் அனுசரிக்கப்பட்டது(1996)

– தென்னகம்.காம் செய்தி குழு