தமிழகம்

1.வீட்டில் எப்படியாவது ஒரு கழிப்பறையைக் கட்ட வேண்டும். மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று ஐந்து ஆண்டுகளாக தனது கணவருடன் போராடியும் தனது தாயால் சாதிக்க முடியாததை, ஒரு மகளாக தனது தந்தையிடம் சில மாதங்களிலேயே சாதித்து காட்டிய திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஊராட்சி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்த முதல் வகுப்பு மாணவி தாரணிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை முழுமையாகப் பார்வையாளர்கள் பார்வையிட குடியரசு தினத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் (International Day of Commemeration in Memory of the Victims of the Holocaust).
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் படைகள் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நாஜி மரண முகாமில் இருந்த யூதர்களை விடுவித்தது. இனப்படுகொலை மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா. அமைப்பு இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு