தமிழகம்

1.தமிழக சட்டப் பேரவை வரும் ஜனவரி 2-ஆம் தேதி கூடுகிறது. தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார்.

2.104 ஆண்டுகள் பழைமையான பாம்பன் பாலத்துக்கு பதிலாக, ரூ. 250 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கவிருப்பதாக ரயில்வே அமைச்சகம்  தெரிவித்தது.


இந்தியா

1.ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவராக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் பிமல் ஜலானும், துணைத் தலைவராக பொருளாதார விவகாரத் துறையின் முன்னாள் செயலர் ராகேஷ் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 பேர் அடங்கிய இக்குழுவில் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், ஆர்பிஐ மத்திய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களான பாரத் தோஷி, சுதீர் மன்கத், ஆர்பிஐ துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2.ஆந்திரப் பிரதேசத்துக்கென உருவாக்கப்பட்ட புதிய உயர்நீதிமன்றம், அந்த மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் வரும் ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து செயல்படத் தொடங்கும். இதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை பிறப்பித்தார்.


வர்த்தகம்

1.பெண்கள் கண்டுபிடிக்கும் புதிய பொருட்களுக்கான காப்புரிமையை விரைவாக வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வழக்கமாக, புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்க, 5 – 7 ஆண்டுகள் ஆகும்.

2.அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலான சலுகைகளை வாரி வழங்குவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் அவற்றுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது.


உலகம்

1.ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மேலும் பல மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.


விளையாட்டு

1.இந்திய ஆடவர் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக, துரோணாச்சார்யா விருது வென்ற சி.ஏ. குட்டப்பா  பொறுப்பேற்றுள்ளார்.

2.ஷான் பொல்லாக்கைப் பின்னுக்குத் தள்ளி 422 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் டேல் ஸ்டெயின்.


ன்றைய தினம்

  • வடகொரியா அரசியலமைப்பு தினம்
  • உலக வங்கி உருவாக்கப்பட்டது(1945)
  • தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது(1956)
  • பேர்சியா, ஈரான் என்ற பெயரை பெற்றது(1934)
  • ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)

– தென்னகம்.காம் செய்தி குழு